Monday, August 23, 2010
19
உதவி கேட்டது உண்மை இல்லை
Aug 23
நண்பர்களே தற்போது வலைப்பதிவில் பூஜா என்ற பெண்ணின் தாய் தந்தையை கண்டறிந்து தருவதற்கு உதவி கேட்டு சில பதிவுகள் உலவுகின்றன...அதைப்படித்துவிட்டு உதவும் மனம் உள்ளவர்கள் தங்கள் வலைத்தளத்திலும் அதனை ஒரு பதிவாக இடுங்கள் என்ற கோரிக்கையும் அதில் உள்ளது...
http://verumpaye.blogspot.com/2010/08/blog-post_23.html
http://sethupathicheemai.blogspot.com/2010/08/blog-post_20.html
அதனைப் படித்துவிட்டு...அந்தச் சிறுமி உச்சரித்ததாகக் கூறும் நாகலுப்பி எங்குள்ளது என்று கூகுளில் தேடினேன்.. இதே மெயில் பல ஆங்கில வலைத்தளங்களில் ஒரு வருடத்திற்கு முன்பே உலவி இருந்தது தெரிந்தது...என்னது சிறுமியின் தாய் தந்தையை ஓராண்டாக கண்டறிய முடியவில்லையா என முதலில் அதிர்ந்தேன்...பின்னர் தொடர்ந்து தேடும் போதுதான் புரிந்தது..இது உண்மையான விசயம் இல்லை என்று.....
இதை யாரோ ஒரு பதிவர் அவர் பிரபலமடைவதற்காக ஆரம்பித்து வைத்திருக்கிறார் போலிருக்கிறது...இவ்வாறெல்லாம். செய்தால் நாளை இது போல் நாம் உண்மையாக செய்தால் கூட உதவிக்கு ஆள் இருக்காது.....இது போன்ற சேவை விசயங்களில் பொய்யுரைத்து பிரபலமடைய நினைப்பது கேவலமான செயல்....அந்தப் பதிவருக்கு என் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்....
வலைப்பதிவர்களே தயவு செய்து....உதவி செய்ய வேண்டுமே என்ற பதட்டத்தில் பொய்யான ஒரு தகவலை பரப்பிவிடாதீர்கள்..அது உண்மையா என முதலில் ஆராயுங்கள்....
அது பற்றிய உண்மையான விபரங்களை அறிய கீழ்கண்ட வலைத்தளங்களைப் படித்துப் பாருங்கள் உண்மை புரியும்..
http://www.indusladies.com/forums/general-discussions-india/22694-help-pooja-find-her-parents.html
http://connect.in.com/nagaluppi/profile.html
http://isms.ibibo.com/kathirib/-Child-Pooja-Father-Rajkiran-Mother-Munny-Devi-Lang-HINDI-Place-Nagaluppi-She-haveone-youngBrother-eldr-sistr_smspost-267737.html
http://vinozine.blogspot.com/2008/07/simple-dummy-mails.html நன்றி பிரியமுடன் ரமேஷ்

0 comments:
Post a Comment